2010-08-26

பழமொழிகள்
இந்த உலகத்தில் எத்தனையோ விசயங்கள் நடக்கின்றன அந்த விசயங்களை நாம் எப்போதும் கூர்ந்து நோக்கும்  போது அடடே இதுபோலவே இந்த விசயம் முன்னரும் நடந்து இருக்கின்றதே என நினைக்க தோன்றும் அது போலவே எமது முன்னோருக்கு தோன்றிய விசயங்களை ஒரு பழமொழி மூலம் நினைவு படுத்த எண்ணினார்கள் அந்த அழகிய பழமொழிகளையே நான் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 

 பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவ குறிப்புகள் ஆகும். பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்கவைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்த சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவும்.

* அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்.
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
* அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்
* அறுக்கத் தெரியாதவனுக்கு ஆயிரம் கதிர் அறுவாள்
* அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்
* ஆட்டுக்கு வால் அளந்து வைத்திருக்கு
* ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
* ஆடத்தெரியாத தேவடியாளுக்கு கூடம் போறாதாம்
* ஆற்றுல போட்டாலும் அளந்து போடு
* ஆழமறியாமல் காலை விடாதே.
* ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன் (மருவி ஆயிரம் பேரைக் கொண்டவன்       அரை வைத்தியன் என்று வழங்குகின்றது)
* இடுக்கண் வருங்கால் நகுக
* உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
* உலை வாயை மூடினாலும் ஊர்வாயை மூடேலாது.
* ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
எடுத்தேன் கவிழ்த்தேன்
*எலி எண்ணைக்கு அழறது எலிப்புழுக்கை எதற்கு அழறது?
* எள் என்றால் எண்ணையாய் நிற்பான்
* ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
* ஓய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்
* கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
 கண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அணைக்கும்.
* கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது
* கழனி பானையில் கைவிட்டமாதிரி
* கனியை விட்டு காயைத் தின்பாளா?
* காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
* சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது
கிடக்கிறபடி கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை
* குடிக்கிறது கூழ் கொப்புளிகிறது பன்னீர்
* குரு குசு விட்டால் குற்றமில்லை
* குரைக்கிற நாய் கடிக்காது
* குமர் தனியப் போனாலும் கொட்டாவி தனியப் போகாது.
* கீரை மசிச்ச சட்டியிலே ரஸம் வச்சமாதிரி
* கெடுவான் கேடு நினைப்பான்
* தனிமரம் தோப்பாகுமா?
* தான் திருடன் பிறறை நம்பான்.
* துப்பு கெட்டவளுக்கு இரட்டை பரிசாம்
* துள்ளற மாடு பொதி சுமக்காது
* தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை
* பசி எடுத்தவனுக்கு ருசி தெரியாது
* பசி வந்திடப் பத்தும் பறந்திடும்
* பழகப் பழக பாலும் புளிக்கும்
* பாம்பு தின்னும் ஊரில் நடு கண்டம் நமக்கு
* பன்றியின் முன்னே முத்துக்களைப் போடாதே
* தம்பி உடையன் படைக்கு அஞ்சான்
* பெத்த வயத்திலே பிரண்டையைக் கட்டிக்கொள்
* பேச்சைக்கொடுத்து ஏச்சை வாங்குவானேன்?
* விதைக்கிற காலத்தில தூங்கிவிட்டு அறுவடையை நினைக்கலாமா?
* வெட்டிண்டுவா என்றால் கட்டிண்டு வருவான்
* வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல
* நூலைப் போல சேலை தாயைப் போல பிள்ளை
* முருங்கைன்னா ஒடிச்சு வளர்க்கணும் பிள்ளைன்னா அடிச்சு வளர்க்கணும்
* யானைக்கும் அடி சறுக்கும்
* அடியாத மாடு பணியது

தகவல் : வீகபீடிய 
பதிவை காண வந்த என் அன்பான வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
என்றும் அன்புடன் 
அன்வாஸ் முகம்மத் 

No comments:






என்னைத் தொடர்பு கொள்ள ......

பெயர்:
மின்னஞ்சல்:
கருத்துக்கள்: