சுற்றுலாத் தளமாகும் கல்பிடிய

கொழும்பிலிருந்து வடக்கே கிட்டத்தட்ட 150 வது km தூரத்தில் அமைந்துள்ள அழகிய கரையோரப் பிரதேசம் தான் கல்பிட்டிய.

 வலப்பக்கம் பச்சைப்பசேலென கண்களை குளிர வைக்கும் கண்டல் தாவரங்கள் சூழ்ந்த களப்பு, இடப்பக்கம் ஒய்யாரமாய் கடல் அலைகள் இடைவிடாது ஓசை விட்டுக்கொண்டிருக்கும் இந்து சமுத்திரம், இந்த ஊரைச்சுற்றி சிறுகடல்களுக்கிடையே எம்மை எப்போதும் வரவேட்பதைப் போலவே காட்சிதரும் குட்டி குட்டி தீவுகள், நாலாபக்கமும் கடல் காரணமாக எப்போதும் இங்கு வீசிக்கொண்டிருக்கும் ஈரப்பதன் கலந்த தென்றல் காற்று இவை தான் நாம் கல்பிட்டிக்கு போகும்போது முதலில் உணரும் இந்த ஊரின் தனிச்சிறந்த அடையாளங்கள்.

இத்துனை சிறப்புக்கள் நிறைந்த ஊர் நிச்சயமாக ஒரு சுற்றுலாப் பிரதேசமாக தான் இருக்க வேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மை, உழைத்து களைத்து ஓய்வெடுக்க இதைவிட சிறந்த சூழ்நிலை வேறு எங்கு கிடைக்கும் என்பதை நான் இங்கே சொல்வதை விட நீங்களும் நேரில் வந்து கண்டால் தான் உங்கள் பொன்னான ஓய்வு நேரங்கள் வீனாகுவது இல்லை என்பதை உணர்வீர்கள்

 ஆனால் இந்த ஊரின் சிறப்புகள் தகுந்த நபர்களிடம் தெரியப் படுத்தப்படவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை, சிற்பிக்குள் முத்து இருந்தாலும் முத்து முத்து தானே என்பதைப்போல இலைமறைகாயாக இருந்த இந்த ஊரின் சிறப்புகள் சமீபகாலமாக மேல்மட்ட நபர்களிடம் எடுத்துச்செல்லப் பட்டிருக்கிறது. சிறப்பிகள் என்று சொல்லும்போது முதலில் நினைவுக்கு வருவது இங்கே ஆழ்கடலில் காணப்படும் டால்பின் மீன்களின் விளையாட்டுக்கள் தான்

 நாம் கல்பிட்டியில் இருந்து பத்தளம் குண்டு எனும் தீவுக்க் கடல் வழியே பிரயாணிக்கும் போது இந்த அழகிய காட்சியை காணலாம் அது போலவே இங்கு காணப்படும் டச்சுக் கோட்டை ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த கோட்டையாகும் இது 1667 ம் ஆண்டு போர்கேயர்களால் கட்டப்பட்ட கோட்டையாகும் இது இன்னமும் கூட இந்த ஊரைப் பாதுகாக்கும் ஒரு கோட்டையாகவே விளங்குவது இதனது சிறப்பம்சமாகும்

 அதுபோல் சூரியக் குளியலுக்கு ஏற்ற அழகிய கடற்கரை, என ஏகப்பட்ட சிறப்பம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் எனவேதான் இந்த ஊரை ஒரு சுற்றுலா வலயமாக்குவதற்கான முன்னேற்பாடுகள் சமீப காலங்களாக இலங்கை அரசாங்கத்தினால் மேட்கொள்ளப்பட்டு வருகின்றது.

களப்பு சார்ந்த மீன்பிடித்தொழில் தான் இந்த ஊரிலுள்ள மீனவர்களின் பிரதான தொழிலாக இருக்கின்றது இங்கே விசேடமாக நண்டு இறால் கனவா போன்ற மீன்பிடிகளும் தனிச்சிறப்பு வாய்ந்தவை அது மட்டுமல்லாமல் இந்த ஊரின் கருவாட்டினை பிடிக்காத இலங்கையனே இல்லை எனலாம் அந்தளவுக்கு பிரபல்யம் வாய்ந்தது தான் கல்பிட்டி கருவாடு

 அதுபோல் இங்குள்ள மக்கள் எல்லோரும் ஒரே சம அளவிலான வாழ்க்கைத் தரத்தினை கொண்டிருப்பதனால் தான் இந்த மக்களுக்கிடையே ஒற்றுமை பிளவுபடாமல் இருக்கின்றது அது மட்டுமல்லாமல் இந்த ஊர் மக்கள் அடிப்படையிலேயே சிறந்த நற்குணம் மிக்கவர்களாக இருக்கின்றார்கள். எது எப்படி இருந்தாலும் இன்னும் சில நாட்களில் சுற்றுலா வலயமாக்கப்பட உள்ள இந்த கல்பிட்டி நகரம் எதிர்காலத்தில் சிறந்த வருமானம் ஈட்கும் இலங்கையின் நகரங்களில் ஒன்றாகுவது நிச்சயம் என்றாலும் இதனது பாதக விளைவுகளான கலாச்சார சீர்கேடு சமநிலையற்ற வலக்கை தரம் என்பன இந்த ஊரில் என்னென்ன ஆட்டங்களை ஆட்டப்போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


green divider

என் அன்பான வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ;
பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் ஒட்டு போடுங்கள் ....







green divider


நன்றி
அன்புடன்
அன்வாஸ் முகம்மத்.

No comments:






என்னைத் தொடர்பு கொள்ள ......

பெயர்:
மின்னஞ்சல்:
கருத்துக்கள்: