நீங்கள் வெளிநாட்டில் பணி புரிபவரா?

ஒன்று இல்லை என்றால் தான் அதன் மதிப்பு எமக்கு புரியும், சாதாரணமாக  இது எல்லா விடயங்களுக்குமே பொருந்தக் கூடிய ஒரு விசயம் நான் எனது உள்நாட்டு வாழ்க்கையை நான் தொலைத்து விட்டு வெளிநாட்டுக்கு வந்த போது தான் இந்த வெளிநாட்டு வாழ்க்கை, என் தாய் நாட்டு வாழ்க்கையின் அருமையை புரிய வைத்தது அதுவும் சாதாரண தருணங்களை விட நாம் நோய் வாய்ப்பட்டு இருக்கின்ற நாட்கள் இருக்கின்றனவே அப்பப்பா என்ன இந்த வாழ்க்கை என்று அலுத்து போய் விட்டது.

 வீட்டிலே பெற்றோர் எம் அருகே இருந்தாலும் அவர்கள் இருக்கின்ற மதிப்பு எப்போது புரியும் என்றால்  எமக்கு ஒரு சுகயீனம் ஏற்படும் போது தான், அவர்கள் எம்முடன் இருந்து எமது நோயில் அவர்களும் பங்கெடுத்து எம்மை கவனித்துக் கொள்வார்களே அப்போது தான். ஆனால் இந்த வெளிநாட்டில் நாம் நோய்வாய்ப் பட்டிருக்கும் போது அவர்களின் மதிப்பை புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் இருந்தாலும் அவர்கள் எம் அருகில் இல்லையே என்பது எவ்வளவு பெரிய கொடுமையான விடயம் இது என்னைப்போல் வெளி நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக சென்று இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்பட்டு இருக்கும் ஒரு அனுபவம் தான் கடந்த சில நாட்களாக எனக்கு ஏற்பட்டிருந்த ஒரு காய்ச்சலின் போதே நான் இதை உணர்ந்தேன். வீட்டில் எனக்கு காய்ச்சல் வந்தால் அதனது வலி பெரிதாக எனக்கு தெரிவதில்லை காரணம் எனது துன்பங்களில் பங்கெடுக்க எனது பெற்றோர் என் அருகே இருந்தார்கள் அந்த பசுமையான தருணங்களை என்னால் எப்போதுமே மறக்க முடியாது அது எனது வேதனையை வெகுவாக குறைத்து இருந்தது ஆனால் இயந்திர மயமான இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் யாரும் யாரையும் எதிர் பார்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் எனது வேதனைகளை யாரிடம் சொல்வது யார் என் அருகே இருந்து எனக்கு மாத்திரைகளை எடுத்து கொடுப்பது ? யார் எனக்கு ஆறுதல் சொல்வது ? எனக்கு முடியாத போது யார் என்னைத் தாங்குவது ? காய்ச்சல் எனக்கு கொடுத்த வேதனைகளை விட இந்த கேள்விகளுக்கு விடை யாருமே என் அருகே இல்லை என்பது தான் அதிக வேதனையை கொடுத்தது வைத்தியர் எழுதிக் கொடுத்த 3 நாள் மெடிக்கல் லீவு தான் எனக்கு இந்த பாடத்தை புகட்டியது. ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு நோக்கங்களுக்காக வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்று செல்கிறார்கள் அதில் 95 % ஆன நோக்கம் பணக் கஷ்டத்துக்காகத்தான் இருக்கும் இந்த பணம் கிடைக்க நாம் எத்தனை விடயங்களை இழக்கிறோம் என்று ஒரு பட்டியல் இட்டுப் பார்த்தால் மீண்டும் அதே பணத்தைக் கொண்டு இதெல்லாம் வாங்க முடியுமா? அன்றேல் எதற்கு இந்த பணம்? இப்படி பலவிதமான கேள்விகள் என்னுள்ளே தோன்றினாலும் எமது சுய நலத்திற்கு இது சரியாகத் தெரியும் ஆனால் இந்த பணத்தினால் தங்கையின் கல்யாணம், அம்மாவின் மருந்து செலவு, வீட்டின் வறுமை, இப்படி பல நல்ல பொதுநல விடயங்களை செய்ய முடியும் என்பது ஒவ்வொரு வெளிநாட்டில் பனி புரியும் மனிதனுக்கும் ஆறுதல் தான் தனக்கு கிடைக்க வேண்டிய சந்தோசங்களை இழந்து பிறரை சந்தோசப்படுத்தி வாழ்வதே சிறந்த வாழ்க்கை இந்த சிறந்த வாழ்க்கையை பெற வெளிநாடுகளில் பனி புரிபவர்களே நீங்கள் தவம் செய்ய தேவை இல்லை சரியான முறையில் உங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை உங்களது  குடும்பத்துக்ககாக பயன்படுத்தினீர்கள் என்றால் நீங்கள் மனிதருள் மகத்தானவராவீர்  என்பது எனது கருத்து

எனது இந்த பதிவு பிடித்து இருந்தால் கீழே உள்ள ஒட்டு பொத்தானை அழுத்தி மறக்காமல் ஒட்டு போடுங்கள் 
நன்றி 
அன்புடன் 
அன்வாஸ் முஹம்மத் 

3 comments:

அன்வாஸ் முஹம்மத் said...

excellent

FARHAN said...

நம்மை போல் வெளிநாட்டில் வாழ்வோரின் வாழ்க்கையின் கஷ்டத்தை ஒரு சிறிய பதிவில் அடக்க முடியாது
உங்கள் பதிவை கண்ணீருடன் பார்த்து வீட்டு நினைவிற்கே போய்விட்டேன்

அன்வாஸ் முஹம்மத் said...

நன்றி பார்ஹான்






என்னைத் தொடர்பு கொள்ள ......

பெயர்:
மின்னஞ்சல்:
கருத்துக்கள்: