பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு மீண்டும் சோதனை


இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த அணியின் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆமிர், முகமது ஆசிப், கம்ரன் அக்மல் ஆகியோரிடம் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். 



இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 3 ஆட்டங்கள் நிறைவடைந்து விட்டன. இதில் இங்கிலாந்து அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 


தற்போது 4வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 26ம் திகதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 446 ஓட்டங்கள் எடுத்தது. இதை அடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் 74 ஓட்டங்ளுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் ஆனது. 


பாகிஸ்தான் அணி வீரர்கள் அதிக அளவில் நோ பால்களை வீசி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியதாகவும் புகார் எழுந்தது. இந்த புகார்களை லண்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தியாக வெளியிட்டது. 


இதில் சூதாட்ட தரகர் மஸார் மஜீத் என்பவர் பாகிஸ்தான் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இதை அடுத்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் தரகர் மஜீத்தை கைது செய்து விசாரித்தனர். 


அப்போது அவர், இந்த சூதாட்டத்துக்கு பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் பட் மூளையாக செயல்பட்டதாகக் கூறினார். மேலும் சல்மான் பட் மூலமாக முகமது ஆசிப், முகமது ஆமிர் கம்ரன் அக்மல் ஆகியோருக்கு பணம் பகிர்ந்து அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இதன் அடிப்படையிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அதிக அளவு நோ பால் வீசியதாகவும் அவர் கூறினார். 


இதை அடுத்து பாகிஸ்தான் வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்குச் சென்று விசாரணை நடத்தினர் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ�ர். பாகிஸ்தான் அணியின் மேலாளர் யவர் சயீது, அணித் தலைவர் சல்மான் பட், வீரர்கள் முகமது ஆசிப், முகமது ஆமிர், கம்ரன் அக்மல் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 


அப்போது அவர்கள் முக்கிய ஆதாரங்கள், ஆவணங்கள், பணம், மடிக்கணினி, செல்போன்கள் முதலியவற்றைக் கைப்பற்றியதாக இங்கிலாந்து தொலைக்காட்சி ஒன்று கூறியது. சுமார் | 1 கோடியே 28 லட்சம் வரை பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் பணம் பெற்று இருக்கலாம் எனத் தெரிகிறது. 


விடியோ ஆதாரம்: சல்மான் பட் பணம் பெறுவது போல விடியோ ஆதாரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் வீரர்கள் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்பது போன்ற உரையாடல்களும் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். விசாரணை முடிவில் சல்மான் பட் உள்ளிட்ட வீரர்கள் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. 


இது குறித்து கருத்து தெரிவித்த அணியின் மேலாளர் யாவர் சயீத், நாங்கள் விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்புக் கொடுத்தோம். எங்களுக்கு உதவி செய்ய வலியுறுத்தி இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்றார். 


கைது செய்யப்பட்ட தரகர் மஜீத் அளித்த வாக்கு மூலத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு விளையாட்டு உணர்வு இல்லை என்றும், அவர்கள் பணம் மற்றும் பெண் சுகத்துக்கு மட்டுமே அலைகிறார்கள் என்றும் கூறினார். இந்தியாவைச் சேர்ந்த சில தரகர்களுடனும் தனக்கு தொடர்பு இருப்பதாக மஜீத் கூறியுள்ளார். 


ஜர்தாரி உத்தரவு: இதனிடையே பாகிஸ்தான் வீரர்களின் மீது சூதாட்ட புகார்கள் வந்துள்ளதை அடுத்து அது குறித்து விசாரித்து தனக்கு உடனடியாக இடைக்கால அறிக்கை ஒன்றை அளிக்குமாறு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தார் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டு ள்ளார். 


விலக மாட்டேன்: இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சல்மான் பட் இது வெறும் குற்றச்சாட்டு மட்டுமே. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கூறலாம். அவை அனைத்தும் உண்மை ஆகி விடாது. 


நாங்கள் முடிந்த அளவு சிறப்பாக விளையாடினோம். விளையாட்டில் வெற்றி தோல்விகள் சகஜம். எல்லா நேரங்களிலும் வெற்றி பெற முடியாது. இந்த விஷயத்துக்காக நான் அணியில் இருந்து விலக மாட்டேன் என்றார்


தகவல்: தெரண செய்திகள்.

நண்பர்களே புதிய பதிவாளன் எனக்கு உங்கள் அன்பான கருத்துக்களை தெரிவித்து எனது எதிர்கால பதிவுகள் எல்லோரையும் சென்றடைய செய்வீராக.....

2 comments:

VANJOOR said...

கீழ்கண்ட சுட்டியை க்ளிக் செய்து விடியோ காணுங்கள். இதை தயவு செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் . தாங்களின் இணைய தளங்களில் வலைபதிவுகளில் மீள்பதிவு செய்யுங்கள்.

சுட்டி:-

உண்மையான‌து குர்ஆனா? பைபிளா?

...............

அன்வாஸ் முஹம்மத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
நன்றி மன்சூர் அவர்களே!
இஸ்லாம் பற்றி இதை விட சிறப்பாக விளக்க தேவை இல்லை என்கின்ற அளவுக்கு சிறப்பாக விளக்கம் இந்த பிரசங்கம் மூலம் தரப்பட்டுள்ளது. இதை காண்பவர்கள் நிச்சயம் இதனது பலன்களை அனுபவிப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.

ஜாசகல்லாஹு ஹைர்!






என்னைத் தொடர்பு கொள்ள ......

பெயர்:
மின்னஞ்சல்:
கருத்துக்கள்: