வாக்களியுங்கள் !


அஸ்ஸலாமு அலைக்கும் அன்பர்களே !

* வருகிற பிரதேச சபை தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள் . .

* உங்கள் வாக்குகள் பிரயோசனமாக இருக்க வேண்டும் என சிந்தித்து வாக்களியுங்கள் !

* நீங்கள் இடும் வாக்குகள் ஒரு பிரயோசனமில்லாத வாக்காக இருக்கக் கூடாது என்று சிந்தித்து வாக்களியுங்கள்.

 *இது உங்கள் ஒவ்வொருவருடைய வாக்குகளுக்கும் உரிய பலத்தை காண்பிக்கவேண்டிய தருணம் என நினைத்து வாக்களியுங்கள்.

* சாது மிரண்டால் காடு கொள்ளாது என நினைத்து வாக்களியுங்கள்.

* ஆனால் நீங்கள் இடுகின்ற வாக்கு முழுதும் எமது சமூகத்தில் ஒரு பிரதிநிதியை தெரிவுசெய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்து வாக்களியுங்கள்.

* மாறாக நீங்கள் கட்சி பாகுபாடு பார்த்து வாக்களிக்க முயற்சித்து உங்களது வாக்குகளின் பெறுமதியை இல்லாமல் செய்து விடக்கூடாது என சிந்தித்து வாக்களியுங்கள்.

* எது எப்படிப்போனாலும் எமக்கென்று ஒரு பிரதிநிதி தேவை என நினைத்து உங்களில் உள்ள ஒருவருக்கு எல்லோருமாக ஒன்றிணைந்து பெரும்பான்மையாக வாக்களியுங்கள்.

*காலம் காலமாக யாரோ உண்டாக்கிய கட்சி பிரிவினைகளை தூர எரிந்து ஒரு நல்ல இஸ்லாமிய சமுதாயம் இந்த கட்சிப் பெயர்களால் சிதைந்து விடக்கூடாது என சிந்தித்து வாக்களியுங்கள்.

* இதற்காக ஒரு கட்சியாக இல்லாமல் ஒரு சமூகமாக இணைந்து எம்மில் ஒருவருக்கு வாக்களியுங்கள்.

* கட்சி என்பது தேர்தலில் நிற்பதற்கான ஒரு ஊடகமே தவிர அது தான் எமது உதிரம் என ஒரு நாளும் நினைத்துவிடாது சிந்தித்து வாக்களியுங்கள்.

* நாம் முட்டாள்களாகியது போதும் . . . மீண்டும் உங்களது புத்திசாலித் தனத்தை காண்பிக்கவேண்டும் என நினைத்து வாக்களியுங்கள்.

* இன்ஷா அல்லாஹ் நம்மில் ஒருவர் நமக்காக நமது பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுவார். . . . 
 
அன்புடன்
அன்வாஸ் முகம்மத் 

உங்கள் blog இல் கிரிக்கட் உலகக் கிண்ண முழு விபரங்கள் இணைக்க ...

உங்கள் blog இல் கிரிக்கட் உலகக் கிண்ண முழு விபரங்கள் இணைக்க நீங்கள் செய்யவேண்டியது
முதலாவதாக உங்கள் பிளாக் கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள்.
பின்னர்
Dashboard --> Design செல்லுங்கள்.
அங்கே add a Gadget என்பதில் கிளிக் செய்து

HTML/JavaScriptHTML/JavaScriptAdd
Add third-party functionality or other code to your blog.
By Blogger 

என்பதினை கிளிக் செய்யுங்கள் ..

இப்போது உங்களுக்கு ஒரு விண்டோ தோன்றும்

அதில் கீலே தரப்பட்டு இருக்குற HTML Cord இணை Copy செய்து
paste செய்து save செய்து கொள்ளுங்கள்.


<div id="ycric-icc-scheduler">
                <div class="hd"></div>
                <div class="bd">
                    <iframe src="http://e.yimg.com/ni/cricket/icc_scheduler/version-3/icc-scheduler/scheduler.html" width="950"  height="600"></iframe>
                </div>
            </div>

இதில் width இனது அளவை கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.
அது போல height இனது அளவையும் கூட்டி குறைத்துக்கொள்ளலாம்.

இப்போது பாருங்கள் உங்கள் blog இல் இந்த உலகக்கிண்ண கிரிக்கட் சம்பந்தமான முழு விபரம் அடங்கிய கீழே உள்ளதைப்போல அழகிய பாப் அப் விண்டோ வந்து இருக்கும்.

தகவல் பிடித்து இருந்தால் மறக்காமல் ஓட்டு போட்டு இதை மற்றவர் களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

நன்றி
என்றும் அன்புடன்
அன்வாஸ் முகம்மத்.

இலங்கையில் கடும் மழை பல்லாயிரக்கணக்கான உயிர்ச் சேதம்


இரண்டு குளங்கள் உடைப்பெடுத்துள்ளன: வீடுகளும் மரங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன

அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள இரண்டு குளங்கள் அதிகளவான வெள்ளப் பெருக்கு காரணமாக உடைப்பெடுத்துள்ளதுடன், வீடுகளும் மரங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
அநுராதபுர மாவட்டத்தின் கெபிதிகொல்லாவ பிரதேசத்திலுள்ள குளம் ஒன்று உடைப்பெடுத்ததில் ஐம்பத்தி ஐயாயிரம் ஏக்கர் கன அடி நீர் வெளியாகியுள்ளது. அதன் காரணமாக அப்பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தென்னை மரங்கள் கூட நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
அப்பகுதியில் வெள்ளத்தின் மத்தியில் தற்போதைக்கு சுமார் நானூறு பொதுமக்கள் சிக்குண்டுள்ளனர் எனவும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
அதற்கடுத்ததாக திருகோணமலையின் கந்தளாய் பிரதேசத்தை அண்மித்த ஆரியமங்கேணி குளத்தின் பாதுகாப்பு அணை உடைப்பெடுத்துள்ளதால் அப்பிரதேசமும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. அதற்கு முன்பே அப்பிரதேசத்தில் கடும் வெள்ளம் காரணமாக அப்பிரதேசத்தை அண்டிய மூதூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்குமான  போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறான நிலையில் தற்போது ஆரியமங்கேணி குளத்தின் வெள்ள நீரும் மூதூரை அண்மித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் காரணமாக மூதூர் நகரம் முற்றாக நீரில் மூழ்கி பல்லாயிரக்கணக்கான உயிர்ச் சேதங்கள் ஏற்படக் கூடிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது

அன்பான வாசகர்களே இது பற்றிய மேலதிக விபரங்கள் தெரிந்தால் எமக்கு தெரியப்படுத்துங்கள்.
நன்றி 
வல்ல இறைவன் எல்லோராயும் பாதுகாப்பானாக.

பேஸ் புக் மூடப்படுகிறது

பதிவர்களே மார்ச் பதினைந்தாம் திகதி முதல் பேஸ் புக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட இருப்பதாகவும் படங்கள் காணொளிகள் இன்னும் இதர விபரங்களை இட்டவர்கள் அதை மீள எடுத்துக் கொள்ளுமாறும் அவசர செய்தி ஒன்றும் மூலம் கேட்டுக் கொண்டு உள்ளனர் சேதியைக் காண இங்கே கிளிக் செய்யவும்
இங்கே கிளிக் செய்யவும்
இதில் எந்தளவு நம்பக தன்மை உள்ளதென்று எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் எனக்கும் எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் .....

புது வருடம் 2011

என்னடி சனியனே இன்னொரு வார்த்த அப்டி சொன்ன நான் மனுசனா இருக்க மாட்டேன் அப்டின்னு கொஞ்சம் கோவத்தோட அவன் பொண்டாட்டிய கண்டிக்குறான். இவன் எங்கயா கண்டிக்குறது அதுக்கு முன்னாடி தான் அவளே இவன தூக்கி மிதிச்சிடுவா போல, ஏன்னா இவ சொன்ன பதில் அப்டி இருக்கு அப்டி என்னடா சொன்னான்னு பாக்குறீங்களா நீ இப்ப மட்டும் என்ன மனுசனாவா இருக்க வாயில நல்லா வருது அப்டிங்குறா என்ன பொன்னுயா இதுன்னு தோனுதா அப்டித்தாங்க எனக்கும் இருந்துச்சு அவன் என்னடான்னா என்னடி வரும் ஓ நார வாயில அப்டிங்குறான் இது எரியுர வெளக்குக்கு எண்ண ஊத்துர மாதிரி இல்லயா? இவன்தான் வேவஸ்த இல்லாம இப்படி பேசுரான்னு பாத்தா அவ ஒரு படி மேலங்க ஏ வாயாடா நார வாய் ஓ வாய் தா பண்ணிவாய் பல்லு வெலக்காதவன்ண்டு சொன்னா எந்த மானஸ்தமுள்ள ஆம்புலக்கிங்க பொருத்துக்க முடியும் 

ஆம்புலங்கிலா நீங்க நெனக்கிரத போலவே அவனுக்கும் கோவம் பொத்துக்கிட்டு வந்துச்சு நானாடி பல்லு வெலக்காதவன் நீ தாண்டி ஒண்ணுமே வெலங்காதவ ஓ மூஞ்சில முழிச்சிட்டு போயி எந்த கரியண்டி வெளங்குச்சி.. அவ்ளவு தாங்க அவ கோவத்தோட ஒரு மொரப்பு மொரச்சா நீங்க மழ பெஞ்சி முடிஞ்சா ஒரு வருமே ஒரு அமைதி பாத்திருக்கிங்களா? அதே மாதிரி ஒரு அமைதிங்க அவ இந்த அமைதிய கலைக்கிற மாதிரி ஒரு வார்த்த சொல்றாங்க; இதுக்கு மேல ஒரு வார்த்த பேசாத .. போதும் எல்லாமே போதும் உன் கூட வாழ்ந்தது எல்லாமே போதும் நான் செத்தா கூட என் பொனத்த பாக்க கூட வந்துடாத கூட் பாய் .... அப்டின்னு சொல்லிட்டு வெடுக்குனு பெட்டியெல்லாம் மடிச்சி கட்டிக்கிட்டு வெளிய கெளம்புறாங்க இந்த நேரத்துல ஒருத்தன் என்னங்க செய்யனு அவள சமாதானப் படுத்தி வீட்டுக்குள்ளேயே வச்சி அவங்க பிரச்சினய சோள் பண்ணனுமா வேணாமா இவன் என்னடான்னா நீ செத்தா நா ஏண்டி வாறன் என் நாய் கூட வராதுடி அப்டிங்குறான் 

என்ன மனுசையா இவனெல்லாம் இதெல்லாம் நடக்குறதுக்கு 5 நிமிசத்துக்கு முன்னாடி தாங்க அவ்னு அவ்லு இப்டி பேசிக்கிட்டாங்க; ஏங்க ரெண்டு நாளா நீங்க உங்க பாட்டுக்கு ஆபீஸ் வேலயா ஊருக்கு போய்டிங்க உங்கள பிரிஞ்சி இந்த 48 மணி நேரம் நா பட்ட கஷ்டம் எனக்கு தாங்க தெரியு ஏங்க என்ன உட்டுட்டு இப்டி போறீங்க நீங்க இல்லாம நான் ஒரு நிமுசம் கூட இருக்க மாட்டேனு உங்களுக்கு தெரியுந் தானே ஆமாடி செல்லோ தெரியுந்த் தான் கண்ணு நா என்ன தங்கம் செய்ய ஏ வேல அப்டி ஆனா நான் அங்க இருந்த 48 மணி நேரமும் உன் நெனப்பாவே தா இருந்தன் இந்த 2 நாளா உண்ண ரொம்ப மிஸ் பண்ணிட்டண்டி அப்டின்னு கட்டிபுடிச்சு அதுக்கு மேல சொல்லலிங்க ஆபாசமா இருக்கும்

ஆனா அப்டி தேனும் பாலுமா இந்தவங்களா இப்டி சண்ட போட்டாங்கன்னு  யோசிக்கிறீங்களா? அதே தாங்க நானும் யோசிச்சன் எந்த காரணத்துக்கு ஆக வண்டி இப்டி சண்ட போட்டு வாழ்க்கயே பிரிஞ்சி போற அளவுக்கு வந்து நிக்காங்க அப்டின்னு பாத்தா நீங்க என்னங்க சொல்லுவிங்க ஈகோ, இல்ல ரெண்டுபேருக்கும் புரிஜிகிற மனப்பான்ம இல்ல அப்டிண்டா அது தாங்க இல்ல என்னா இவங்க ரெண்டுபேரும் ஓராள ஓராளு புரிஞ்சி சண்ட சச்சரவு ஈகோ இல்லாம வீட்டுக்குடுத்து வாழ்ந்தவங்க தாங்க ஆனா அந்த நியூ இயர் ராத்திரில ஒண்ணா சேந்து சந்தோசத்துல ஒரு பெக் அடிச்சுட்டாங்க அது தாங்க அவங்கள இப்டியெல்லாம் பேச வச்சிட்டு நியூ இயர வரவேக்குறதுக்கு இவங்க அடிச்ச பெக்கு இவங்க வாழ்க்கய வழியனுப்பிடுச்சு பாதிங்களா ? இந்த மாதிரி பெக்கடிக்குறது இந்த காலத்துல சகஜம் அப்டின்னு கேசுவளா சொள்ளுறாங்க ஆனா ஒரு குடும்பத்துலே இவ்ளோ பிரச்சினய உண்டாக்குற இந்த பாலாப்போன குடி நம்ம கலாச்சாரத்துக்கு தேவயாங்க? கேட்டா நாங்க 2011ல இருக்கோம் அப்டிங்குராங்க ஆனா 2010 கடசி ராத்திரி தொழச்ச அந்த வாழ்க்கய பத்தி இவங்களுக்கெல்லாம் ஒரு கவல கூட கெடயாதுங்க நாம தாங்க இந்த சமுதாயத்த பத்தி ரொம்ப கவலப்படுறோம் ஆனா இவங்களுக்கு இவன் இல்லன்னா இன்னொருத்தான் அவ இல்லேன்னா இன்னொருத்தி எப்ப நம்ம சமுதாயம் உருப்பட போகுதுன்னு நெனக்கிறீங்களா? ஆனா ஒண்ணுங்க இந்த ஜென்மங்கள் நாமலு ஒரு சமுதாயத்துக்குள்ள தான் இருக்கோம் சமூகம் அப்டின்னு சொன்னா அது ஒரு உடல் மாதிரி இந்த உடம்புல எந்த பகுதில வருத்தம் வந்தாலும் அது முழு ஒடம்பயும் தான் பாதிக்கும் அப்டின்னு நெனச்சி  நா வந்து தனி ஆள் கெடயாது எனக்கு ஒரு பிரச்சின வந்துச்சு அப்டின்னா அது என்னட சமூகத்துக்கும் தான் பிரச்சனாயா இருக்கும் அப்டின்னு நெனக்கும் போது தாங்க.... இல்லேன்னா நீங்க நான் மட்டும் நல்லா இருந்து அவங்களெல்லாம் அப்டியே இருந்தாங்கன்னா பாதிப்பு அவங்களுக்கும் மட்டும் இல்லீங்க நம்மளுக்கும் தான்....
அது சரிங்க அந்த பிரச்சினய அப்புறம் நிம்மதியா பாக்கலாம் இப்ப இத சொடுக்கி ஒரு ஓட்டு போடுங்கங்கங்ககங்க ................
என்றும் அன்புடன்
அன்வாஸ்          

புது வருடம்

எனக்கு பிடித்த 3 முத்தான பாடல்கள்

செயட்கையான செட்ஸ் போட்டு ஸ்டுடியோவுக்குள் மட்டுமே வைத்து திரைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்த தமிழ் சினிமா உலகம் அந்த நியதியை விட்டு விட்டு கிராமத்து மண் வாசத்துக்கு ரசிகர்களை கூட்டிச்சென்ற படம் 16 வயதினிலே. இந்தப் படத்தில் இருக்கும் செந்தூரப்பூவே என்று ஆரம்பிக்கும் பாடல் இளமைக் காலத்தில் பெண்களின் அழகு நூறு மடங்கு கூடிப்போகும் என்று சொல்லுவார்கள் அதற்கு ஏற்ற விதமாக செதுக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் கட்சியில் தோன்றும் ஸ்ரீ தேவி எல்லோரும் எதிர்பார்த்த அழகைக் கொடுக்கிறார். எனது பள்ளிப்பருவ நினைவுகளில் இந்த பாடல் ஒரு சிற்பம் போல என் மனதுள் செதுக்கப்பட்டு விட்டது.
தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்! 
கண்களை மூட விட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்! 
என்ற கங்கை அமரனின் வரிகள் என்னை கற்பனை உலகுக்கு அழைத்துச் செல்கிறது அமைதியாக.
அதிலும் இளயராஜாவின் இசை அந்த கிராமத்து எழிலை மெருகூட்டுகிறது அமர்க்களமாக வாருங்கள் கேட்கலாம் அந்த அழகிய பாடலை.

உன்னை கண்டு தென்றலும் நின்று போனதுண்டு 
உன்னை காண வென்னிலா வந்து போவதுண்டு 
ஏன் தேவி இன்று நீ என்னை கொல்கிறாய் 
முள் மீது ஏனடி தூங்க சொல்கிறாய் 
இதய கோவில் திரைப்படத்திற்காக எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய மௌன ராகம் இது. காதல் தோல்வி ஒரு அழகிய கவிதையாய் உருவெடுத்திருக்கிறது இந்தப் பாடலில் பாருங்கள் ஒரு தோற்றுப்போன சந்தர்ப்பம் கூட அழகிய கலையாய் மாறுவதை. இந்த உலகில் ஔவொரு தோல்விகளும் ஏதோ ஒரு நலவைத்தான் உண்டாக்குகின்றது. என் உதடுகள் அடிக்கடி முணு முணுக்கும் பாடல் ...
கேளடி கண்மணி படத்திற்காக இளயராஜாவின் இசையில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல் இது 
வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமயில் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அனங்கிவல் பிறப்பிதுதான்...............
என்ன மூச்கு வாங்குகிறதா ? என்ன அருமயான வரிகள் இந்தப்படலில் ...
இன்னும் நிறைய இடைக்கால பாடல்கள் இருக்கின்றன நேரமின்மயால் அவற்றை இடமுடியவில்லை இருந்தாலும் நேரம் கிடைக்கும் பொது அவற்றையும் பதிவிட தவறா மாட்டேன் 

நன்றி 
என்றும் அன்புடன்
அன்வாஸ் ....

நீங்கள் வெளிநாட்டில் பணி புரிபவரா?

ஒன்று இல்லை என்றால் தான் அதன் மதிப்பு எமக்கு புரியும், சாதாரணமாக  இது எல்லா விடயங்களுக்குமே பொருந்தக் கூடிய ஒரு விசயம் நான் எனது உள்நாட்டு வாழ்க்கையை நான் தொலைத்து விட்டு வெளிநாட்டுக்கு வந்த போது தான் இந்த வெளிநாட்டு வாழ்க்கை, என் தாய் நாட்டு வாழ்க்கையின் அருமையை புரிய வைத்தது அதுவும் சாதாரண தருணங்களை விட நாம் நோய் வாய்ப்பட்டு இருக்கின்ற நாட்கள் இருக்கின்றனவே அப்பப்பா என்ன இந்த வாழ்க்கை என்று அலுத்து போய் விட்டது.

 வீட்டிலே பெற்றோர் எம் அருகே இருந்தாலும் அவர்கள் இருக்கின்ற மதிப்பு எப்போது புரியும் என்றால்  எமக்கு ஒரு சுகயீனம் ஏற்படும் போது தான், அவர்கள் எம்முடன் இருந்து எமது நோயில் அவர்களும் பங்கெடுத்து எம்மை கவனித்துக் கொள்வார்களே அப்போது தான். ஆனால் இந்த வெளிநாட்டில் நாம் நோய்வாய்ப் பட்டிருக்கும் போது அவர்களின் மதிப்பை புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் இருந்தாலும் அவர்கள் எம் அருகில் இல்லையே என்பது எவ்வளவு பெரிய கொடுமையான விடயம் இது என்னைப்போல் வெளி நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக சென்று இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்பட்டு இருக்கும் ஒரு அனுபவம் தான் கடந்த சில நாட்களாக எனக்கு ஏற்பட்டிருந்த ஒரு காய்ச்சலின் போதே நான் இதை உணர்ந்தேன். வீட்டில் எனக்கு காய்ச்சல் வந்தால் அதனது வலி பெரிதாக எனக்கு தெரிவதில்லை காரணம் எனது துன்பங்களில் பங்கெடுக்க எனது பெற்றோர் என் அருகே இருந்தார்கள் அந்த பசுமையான தருணங்களை என்னால் எப்போதுமே மறக்க முடியாது அது எனது வேதனையை வெகுவாக குறைத்து இருந்தது ஆனால் இயந்திர மயமான இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் யாரும் யாரையும் எதிர் பார்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் எனது வேதனைகளை யாரிடம் சொல்வது யார் என் அருகே இருந்து எனக்கு மாத்திரைகளை எடுத்து கொடுப்பது ? யார் எனக்கு ஆறுதல் சொல்வது ? எனக்கு முடியாத போது யார் என்னைத் தாங்குவது ? காய்ச்சல் எனக்கு கொடுத்த வேதனைகளை விட இந்த கேள்விகளுக்கு விடை யாருமே என் அருகே இல்லை என்பது தான் அதிக வேதனையை கொடுத்தது வைத்தியர் எழுதிக் கொடுத்த 3 நாள் மெடிக்கல் லீவு தான் எனக்கு இந்த பாடத்தை புகட்டியது. ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு நோக்கங்களுக்காக வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்று செல்கிறார்கள் அதில் 95 % ஆன நோக்கம் பணக் கஷ்டத்துக்காகத்தான் இருக்கும் இந்த பணம் கிடைக்க நாம் எத்தனை விடயங்களை இழக்கிறோம் என்று ஒரு பட்டியல் இட்டுப் பார்த்தால் மீண்டும் அதே பணத்தைக் கொண்டு இதெல்லாம் வாங்க முடியுமா? அன்றேல் எதற்கு இந்த பணம்? இப்படி பலவிதமான கேள்விகள் என்னுள்ளே தோன்றினாலும் எமது சுய நலத்திற்கு இது சரியாகத் தெரியும் ஆனால் இந்த பணத்தினால் தங்கையின் கல்யாணம், அம்மாவின் மருந்து செலவு, வீட்டின் வறுமை, இப்படி பல நல்ல பொதுநல விடயங்களை செய்ய முடியும் என்பது ஒவ்வொரு வெளிநாட்டில் பனி புரியும் மனிதனுக்கும் ஆறுதல் தான் தனக்கு கிடைக்க வேண்டிய சந்தோசங்களை இழந்து பிறரை சந்தோசப்படுத்தி வாழ்வதே சிறந்த வாழ்க்கை இந்த சிறந்த வாழ்க்கையை பெற வெளிநாடுகளில் பனி புரிபவர்களே நீங்கள் தவம் செய்ய தேவை இல்லை சரியான முறையில் உங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை உங்களது  குடும்பத்துக்ககாக பயன்படுத்தினீர்கள் என்றால் நீங்கள் மனிதருள் மகத்தானவராவீர்  என்பது எனது கருத்து

எனது இந்த பதிவு பிடித்து இருந்தால் கீழே உள்ள ஒட்டு பொத்தானை அழுத்தி மறக்காமல் ஒட்டு போடுங்கள் 
நன்றி 
அன்புடன் 
அன்வாஸ் முஹம்மத் 

சுற்றுலாத் தளமாகும் கல்பிடிய

கொழும்பிலிருந்து வடக்கே கிட்டத்தட்ட 150 வது km தூரத்தில் அமைந்துள்ள அழகிய கரையோரப் பிரதேசம் தான் கல்பிட்டிய.

 வலப்பக்கம் பச்சைப்பசேலென கண்களை குளிர வைக்கும் கண்டல் தாவரங்கள் சூழ்ந்த களப்பு, இடப்பக்கம் ஒய்யாரமாய் கடல் அலைகள் இடைவிடாது ஓசை விட்டுக்கொண்டிருக்கும் இந்து சமுத்திரம், இந்த ஊரைச்சுற்றி சிறுகடல்களுக்கிடையே எம்மை எப்போதும் வரவேட்பதைப் போலவே காட்சிதரும் குட்டி குட்டி தீவுகள், நாலாபக்கமும் கடல் காரணமாக எப்போதும் இங்கு வீசிக்கொண்டிருக்கும் ஈரப்பதன் கலந்த தென்றல் காற்று இவை தான் நாம் கல்பிட்டிக்கு போகும்போது முதலில் உணரும் இந்த ஊரின் தனிச்சிறந்த அடையாளங்கள்.

இத்துனை சிறப்புக்கள் நிறைந்த ஊர் நிச்சயமாக ஒரு சுற்றுலாப் பிரதேசமாக தான் இருக்க வேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மை, உழைத்து களைத்து ஓய்வெடுக்க இதைவிட சிறந்த சூழ்நிலை வேறு எங்கு கிடைக்கும் என்பதை நான் இங்கே சொல்வதை விட நீங்களும் நேரில் வந்து கண்டால் தான் உங்கள் பொன்னான ஓய்வு நேரங்கள் வீனாகுவது இல்லை என்பதை உணர்வீர்கள்

 ஆனால் இந்த ஊரின் சிறப்புகள் தகுந்த நபர்களிடம் தெரியப் படுத்தப்படவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை, சிற்பிக்குள் முத்து இருந்தாலும் முத்து முத்து தானே என்பதைப்போல இலைமறைகாயாக இருந்த இந்த ஊரின் சிறப்புகள் சமீபகாலமாக மேல்மட்ட நபர்களிடம் எடுத்துச்செல்லப் பட்டிருக்கிறது. சிறப்பிகள் என்று சொல்லும்போது முதலில் நினைவுக்கு வருவது இங்கே ஆழ்கடலில் காணப்படும் டால்பின் மீன்களின் விளையாட்டுக்கள் தான்

 நாம் கல்பிட்டியில் இருந்து பத்தளம் குண்டு எனும் தீவுக்க் கடல் வழியே பிரயாணிக்கும் போது இந்த அழகிய காட்சியை காணலாம் அது போலவே இங்கு காணப்படும் டச்சுக் கோட்டை ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த கோட்டையாகும் இது 1667 ம் ஆண்டு போர்கேயர்களால் கட்டப்பட்ட கோட்டையாகும் இது இன்னமும் கூட இந்த ஊரைப் பாதுகாக்கும் ஒரு கோட்டையாகவே விளங்குவது இதனது சிறப்பம்சமாகும்

 அதுபோல் சூரியக் குளியலுக்கு ஏற்ற அழகிய கடற்கரை, என ஏகப்பட்ட சிறப்பம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் எனவேதான் இந்த ஊரை ஒரு சுற்றுலா வலயமாக்குவதற்கான முன்னேற்பாடுகள் சமீப காலங்களாக இலங்கை அரசாங்கத்தினால் மேட்கொள்ளப்பட்டு வருகின்றது.

களப்பு சார்ந்த மீன்பிடித்தொழில் தான் இந்த ஊரிலுள்ள மீனவர்களின் பிரதான தொழிலாக இருக்கின்றது இங்கே விசேடமாக நண்டு இறால் கனவா போன்ற மீன்பிடிகளும் தனிச்சிறப்பு வாய்ந்தவை அது மட்டுமல்லாமல் இந்த ஊரின் கருவாட்டினை பிடிக்காத இலங்கையனே இல்லை எனலாம் அந்தளவுக்கு பிரபல்யம் வாய்ந்தது தான் கல்பிட்டி கருவாடு

 அதுபோல் இங்குள்ள மக்கள் எல்லோரும் ஒரே சம அளவிலான வாழ்க்கைத் தரத்தினை கொண்டிருப்பதனால் தான் இந்த மக்களுக்கிடையே ஒற்றுமை பிளவுபடாமல் இருக்கின்றது அது மட்டுமல்லாமல் இந்த ஊர் மக்கள் அடிப்படையிலேயே சிறந்த நற்குணம் மிக்கவர்களாக இருக்கின்றார்கள். எது எப்படி இருந்தாலும் இன்னும் சில நாட்களில் சுற்றுலா வலயமாக்கப்பட உள்ள இந்த கல்பிட்டி நகரம் எதிர்காலத்தில் சிறந்த வருமானம் ஈட்கும் இலங்கையின் நகரங்களில் ஒன்றாகுவது நிச்சயம் என்றாலும் இதனது பாதக விளைவுகளான கலாச்சார சீர்கேடு சமநிலையற்ற வலக்கை தரம் என்பன இந்த ஊரில் என்னென்ன ஆட்டங்களை ஆட்டப்போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


green divider

என் அன்பான வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ;
பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் ஒட்டு போடுங்கள் ....







green divider


நன்றி
அன்புடன்
அன்வாஸ் முகம்மத்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு மீண்டும் சோதனை


இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த அணியின் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆமிர், முகமது ஆசிப், கம்ரன் அக்மல் ஆகியோரிடம் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். 



இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 3 ஆட்டங்கள் நிறைவடைந்து விட்டன. இதில் இங்கிலாந்து அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 


தற்போது 4வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 26ம் திகதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 446 ஓட்டங்கள் எடுத்தது. இதை அடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் 74 ஓட்டங்ளுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் ஆனது. 


பாகிஸ்தான் அணி வீரர்கள் அதிக அளவில் நோ பால்களை வீசி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியதாகவும் புகார் எழுந்தது. இந்த புகார்களை லண்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தியாக வெளியிட்டது. 


இதில் சூதாட்ட தரகர் மஸார் மஜீத் என்பவர் பாகிஸ்தான் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இதை அடுத்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் தரகர் மஜீத்தை கைது செய்து விசாரித்தனர். 


அப்போது அவர், இந்த சூதாட்டத்துக்கு பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் பட் மூளையாக செயல்பட்டதாகக் கூறினார். மேலும் சல்மான் பட் மூலமாக முகமது ஆசிப், முகமது ஆமிர் கம்ரன் அக்மல் ஆகியோருக்கு பணம் பகிர்ந்து அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இதன் அடிப்படையிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அதிக அளவு நோ பால் வீசியதாகவும் அவர் கூறினார். 


இதை அடுத்து பாகிஸ்தான் வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்குச் சென்று விசாரணை நடத்தினர் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ�ர். பாகிஸ்தான் அணியின் மேலாளர் யவர் சயீது, அணித் தலைவர் சல்மான் பட், வீரர்கள் முகமது ஆசிப், முகமது ஆமிர், கம்ரன் அக்மல் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 


அப்போது அவர்கள் முக்கிய ஆதாரங்கள், ஆவணங்கள், பணம், மடிக்கணினி, செல்போன்கள் முதலியவற்றைக் கைப்பற்றியதாக இங்கிலாந்து தொலைக்காட்சி ஒன்று கூறியது. சுமார் | 1 கோடியே 28 லட்சம் வரை பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் பணம் பெற்று இருக்கலாம் எனத் தெரிகிறது. 


விடியோ ஆதாரம்: சல்மான் பட் பணம் பெறுவது போல விடியோ ஆதாரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் வீரர்கள் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்பது போன்ற உரையாடல்களும் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். விசாரணை முடிவில் சல்மான் பட் உள்ளிட்ட வீரர்கள் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. 


இது குறித்து கருத்து தெரிவித்த அணியின் மேலாளர் யாவர் சயீத், நாங்கள் விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்புக் கொடுத்தோம். எங்களுக்கு உதவி செய்ய வலியுறுத்தி இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்றார். 


கைது செய்யப்பட்ட தரகர் மஜீத் அளித்த வாக்கு மூலத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு விளையாட்டு உணர்வு இல்லை என்றும், அவர்கள் பணம் மற்றும் பெண் சுகத்துக்கு மட்டுமே அலைகிறார்கள் என்றும் கூறினார். இந்தியாவைச் சேர்ந்த சில தரகர்களுடனும் தனக்கு தொடர்பு இருப்பதாக மஜீத் கூறியுள்ளார். 


ஜர்தாரி உத்தரவு: இதனிடையே பாகிஸ்தான் வீரர்களின் மீது சூதாட்ட புகார்கள் வந்துள்ளதை அடுத்து அது குறித்து விசாரித்து தனக்கு உடனடியாக இடைக்கால அறிக்கை ஒன்றை அளிக்குமாறு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தார் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டு ள்ளார். 


விலக மாட்டேன்: இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சல்மான் பட் இது வெறும் குற்றச்சாட்டு மட்டுமே. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கூறலாம். அவை அனைத்தும் உண்மை ஆகி விடாது. 


நாங்கள் முடிந்த அளவு சிறப்பாக விளையாடினோம். விளையாட்டில் வெற்றி தோல்விகள் சகஜம். எல்லா நேரங்களிலும் வெற்றி பெற முடியாது. இந்த விஷயத்துக்காக நான் அணியில் இருந்து விலக மாட்டேன் என்றார்


தகவல்: தெரண செய்திகள்.

நண்பர்களே புதிய பதிவாளன் எனக்கு உங்கள் அன்பான கருத்துக்களை தெரிவித்து எனது எதிர்கால பதிவுகள் எல்லோரையும் சென்றடைய செய்வீராக.....





என்னைத் தொடர்பு கொள்ள ......

பெயர்:
மின்னஞ்சல்:
கருத்துக்கள்: